
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக வானிலை: வடகிழக்கு பருவ மழை தென் இந்திய பகுதிகளில் இருந்து வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 12
தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
வட தமிழக பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
சி,ஜிகா
ஜனவரி 13
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.