தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்: வானிலை அறிக்கை
எழுதியவர்
Sindhuja SM
Apr 08, 2023
05:56 pm
செய்தி முன்னோட்டம்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஏப்ரல் 8ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 8, 2023