
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
ஏப்ரல்-28
இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30-40கிமீ) கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி, கோவை, திண்டுக்கல்
ஏப்ரல்-29
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30-40கிமீ) கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி
details
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
ஏப்ரல்-30
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி
மே-1
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர்
மே-2
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி,கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி