அடுத்த செய்திக் கட்டுரை
    
     
                                                                                தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
                எழுதியவர்
                Sindhuja SM
            
            
                            
                                    Apr 18, 2023 
                    
                     06:25 pm
                            
                    செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதிகளில் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 20 தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவான வெப்பநிலைகள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 17, 2023