Page Loader
இந்தியாவிற்கு வந்து ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்: குதூகலத்தில் மஹிந்திரா குழுமம்
நீங்கள், நான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஆட்டோ பந்தயத்தை வைத்துக்கொள்ளலாம்: ஆனந்த் மஹிந்திரா

இந்தியாவிற்கு வந்து ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்: குதூகலத்தில் மஹிந்திரா குழுமம்

எழுதியவர் Sindhuja SM
Mar 06, 2023
06:28 pm

செய்தி முன்னோட்டம்

கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தற்போது இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக மின்சார ஆட்டோவை ஓட்டி பார்த்த அவர், தன் அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "கார்பன் உமிழ்வு இல்லாத உலகிற்குச் செல்வதற்கு, விவசாயம் முதல் போக்குவரத்து வரை அனைத்தையும் செய்யும் முறையை நாம் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார். மேலும், மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோவை பற்றியும் அவர் தன் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா, "ட்ரியோவைப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி, பில் கேட்ஸ். உங்களது அடுத்த பயணத்தின் போது நீங்கள், நான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஆட்டோ பந்தயத்தை வைத்துக்கொள்ளலாம்..." என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆனந்த் மஹிந்தராவின் ட்விட்டர் பதிவு