அயோத்தி ராமர் கோயிலின் முதல் வான்வழி காட்சிகள்: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கப்பட்ட வீடியோ வெளியீடு
அயோத்தி ராமர் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார். பிரதமர் அயோத்திக்கு வரும் போது அவரது ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட பிரமாண்ட அயோத்தி கோவிலின் வான்வழி வீடியோவைப் பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் கடுமையான விரதங்களை கடைபிடித்து வந்தார். இந்த பிரமாண்ட விழாவுக்குப் பிறகு, ராமர் கோவில் கட்டிய தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரான் பிரதிஷ்டா விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மதப் பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்." என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.