
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இசைஞானி இளையராஜா; என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்துள்ளார்.
இது தொடர்பான வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் நடைபெற உள்ளது. ஹைதராபாத் திரிதண்டி சின்ன ஜியர் என அழைக்கப்படும் நாராயண ராமானுஜர் வெளியிட அதை ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தைச் சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இளையராஜா கோவிலுக்கு சென்றபோது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்!#SunNews | #Ilaiyaraja | #Srivilliputhur | #AndalTemple pic.twitter.com/PdgCkshMxP
— Sun News (@sunnewstamil) December 16, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து 'இசைஞானி' இளையராஜா வெளியேற்றம்
— Sun News (@sunnewstamil) December 16, 2024
அர்த்த மண்டக படியின் அருகே நின்றபடி கோயில் நிர்வாகம் அளித்த மரியாதை ஏற்றார்#SunNews | #Ilaiyaraja | #Srivilliputhur | #AndalTemple pic.twitter.com/L4Z3muLkAU
விவரங்கள்
கோவில் கருவறைக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா
இளையராஜா இன்று காலை கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யத் தந்தார்.
அப்போது, கோயில் கருவறைக்குள் நுழைந்தபோது, கோயில் ஜீயர்கள் சிலரும், பக்தர்கள் சிலரும் இந்த நடவடிக்கையில் அதிருப்தி தெரிவிக்கவே, இளையராஜா கருவறைக்கு வெளியே இருந்த மண்டபத்தில் நிற்க வைக்கப்பட்டார்.
கருவறைக்கு வெளியே இருக்கும் அர்த்த மண்டப படியின் அருகில் நின்று கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.