பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி
செய்தி முன்னோட்டம்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், ராஜேஷ் தாஸ்க்கு அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது முதன்மை நீதிமன்றம்.
ட்விட்டர் அஞ்சல்
டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை
#BREAKING | முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு விதிக்கப்பட்ட தண்டணையை உறுதி செய்தது விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம்#SunNews | #Villupuram | #RajeshDas pic.twitter.com/K7U96xMYS4
— Sun News (@sunnewstamil) February 12, 2024