விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம்
விழுப்புரம்-கோட்டக்குப்பம் பகுதியில் புதுப்பட்டு கிராமம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் மீனவ பெண்கள் 6 பேர் இன்று(ஜூலை.,16)மீன்வியாபாரம் செய்ய கிளம்பி ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார், ஓட்டுநர் கட்டுப்பாட்டினைமீறி சாலையோரமிருந்த அந்த 6 பெண்கள் மீது மோதியுள்ளது. இதில் லட்சுமி(45),கோவிந்தம்மாள்(50)உள்ளிட்ட இருவரும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர். தொடர்ந்து மற்ற 4 பேர் ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கெங்கையம்மாள் என்பவரும் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த சொகுசுக்காரில் வந்த 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது 3 பெண்கள் பலியான சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.