ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
செய்தி முன்னோட்டம்
தருமபுரியில் சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்கவுள்ளனர்.
இந்த திருப்பதி பயணம் குறித்து பேசிய அக்கிராம மக்கள், தமது முன்னோர்கள் திருப்பதியிலுள்ள பெருமாள் கோயிலை போன்ற ஓர் கோயிலை தங்கள் கிராமத்தில் கட்ட வேண்டும்.
அப்படிப்பட்ட ஓர் கோயிலை கட்டியப் பிறகே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்போம் என்று வேண்டுதல் வைத்ததாக கூறுகிறார்.
அதன்படி, தங்கள் முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதால் ஊரே ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் பெருமாள் கோயில் ஒன்றினை கட்டியுள்ளார்கள்.
கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
திருப்பதி கோயில் போன்றே தங்கள் கிராமத்திலும் பெருமாள் கோயில்
தற்போது அந்த கோயிலுக்கு அனைவரும் சேர்ந்து கும்பாபிஷேகமும் செய்து முடித்துள்ளார்கள் என்று தெரிகிறது.
இதனை தொடர்ந்து தங்கள் முன்னோர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சந்தோஷத்தில் அந்த கிராம மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு ஊரே திரண்டு ஒன்றாக திருப்பதிக்கு செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஊர் மக்கள் சுமார் 300 பேர் 5 பேருந்துகளில் கிளம்பி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்கள்.
திருப்பதி பெருமாளை தரிசித்த பின்னர் சனிக்கிழமை கிளம்பி தங்கள் ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.