Page Loader
முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 

எழுதியவர் Sindhuja SM
Apr 17, 2023
04:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியக் கொடியை முகத்தில் வரைந்திருந்ததால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் தன்னைத் அனுமதிக்கவில்லை என்று பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. பொற்கோவிலுக்குள் நுழையும் இருவரை ஒரு காவலாளி தடுத்து நிறுத்துவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. "இது பஞ்சாப்" அதனால் அனுமதி கிடையாது என்று அந்த காவலாளி கூறுகிறார். அதற்கு, அந்த பெண் "இது இந்தியா இல்லையா?" என்று கேட்கிறார். அதற்கு அந்த காவலாளி இல்லை என்பது போல் தலையை ஆட்டுகிறார். தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வைரலாகி வரும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

embed

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ 

1) A girl was stopped from entering Golden Temple because she had an Indian flag painted on her face. The man who denied her entry into Golden Temple said, this is Punjab not India. pic.twitter.com/IfUi74poIk— Anshul Saxena (@AskAnshul) April 17, 2023