வீடியோ: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குச் புறப்பட்ட போது தனது டிஜிட்டல் டேப்லெட்டுடன் செய்தியாளர்ளின் கேமெராக்களுக்கு போஸ் கொடுத்தார்.
தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்வின் சாதனையை இன்று சமன் செய்யவுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளதால் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
அந்த தேர்தலில் வெல்லும் அரசாங்கம் முழு பட்ஜெட்டையும் அநேகமாக ஜூலை மாதம் தாக்கல் செய்யும்.
இடைக்கால பட்ஜெட் என்பதால், பெரிய கொள்கை மாற்றங்கள் மற்றும் பெரிய அறிவிப்புகள் இல்லாமல் போகலாம். ஆனால் எதிர்பார்ப்புகள் என்னமோ அதிகமாகவே உள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்
#WATCH | Finance Minister Nirmala Sitharaman along with her team before the presentation of the country's interim Budget pic.twitter.com/hohpB7qtZi
— ANI (@ANI) February 1, 2024