Page Loader
முன்னாள் ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார்
புருஷோத்தமன் 1928இல் கேரளாவின் வைக்கம் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார்.

முன்னாள் ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார்

எழுதியவர் Sindhuja SM
Jul 31, 2023
04:29 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான வக்கோம் புருஷோத்தமன்(95) திருவனந்தபுரம் குமாரபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். முதுமையினால் ஏற்பட்ட நோய்களால் இவர் சில காலமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புருஷோத்தமன் 1928இல் கேரளாவின் வக்கோம் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். 1947இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், அதன்பிறகு பல்வேறு கட்சி பதவிகளில் பணியாற்றி இருக்கிறார். 1967இல் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புருஷோத்தமன், கேரள அரசாங்கத்தின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக பணியாற்றினார். 1984-1991ஆம் ஆண்டுகளில் மக்களவை எம்.பியாக இவர் பணிபுரிந்தார்.

இப்பிகிவ்

இவர் கேரள வரலாறு மற்றும் அரசியல் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்

மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி கொள்கைகளை கொண்டிருந்த இவர், கேரள வரலாறு மற்றும் அரசியல் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இவர் பணியாற்றி இருக்கிறார். 1970, 1977, 1980, 1982, மற்றும் 2001 ஆகிய ஆண்டுகள் நடந்த சட்டபேரவை தேர்தல்களில் அட்டிங்கல் தொகுதியில் நின்று இவர் வெற்றி பெற்றார். மூன்று முறை கேரள அரசின் அமைச்சராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். புருஷோத்தமன் 1993 முதல் 1996 வரை அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் 6வது லெப்டினன்ட் கவர்னராகவும், 2011 முதல் 2014 வரை மிசோரம் ஆளுநராகவும், 2014இல் இரண்டு மாதங்களுக்கு திரிபுரா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.