Page Loader
"சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை 
விடுதி மாணவர்கள் சிலர் அசைவ உணவு உண்பவர்களிடம் இடத்தை காலி செய்யும்படி வற்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

"சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை 

எழுதியவர் Sindhuja SM
Jul 30, 2023
06:39 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக(ஐஐடி) விடுதி கேண்டீனில் அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவர் ஒருவரை மற்றொரு மாணவர் அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம், 12ஆம் நம்பர் விடுதியின் கேன்டீனில் இந்த சம்பவம் நடந்ததாக ஐஐடி போவாய்யில் படிக்கும் மாணவர் ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். IIT விடுதியில் உள்ள சில மாணவர்கள் கேண்டீன் சுவர்களில் "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்" என்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் என்றும் அந்த மாணவர் கூறியுள்ளார். மேலும், விடுதி மாணவர்கள் சிலர் அசைவ உணவு உண்பவர்களிடம் இடத்தை காலி செய்யும்படி வற்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிஜு

"இது அவமானகரமானது": ட்விட்டரில் மாணவர்கள் புகார் 

"மூன்று மாதங்களுக்கு முன்பு, மாணவர்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்ட மனுவின் மூலம், IITயில் அதிகாரப்பூர்வ உணவுப் பிரிப்புக் கொள்கை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், மாணவர்கள் உண்ணும் உணவின் அடிப்படையில் அவர்களுக்கு வெவ்வேறு இருக்கைகள் வழங்கும் நடைமுறை இன்னும் IITயில் உள்ளது." என்று அந்த மாணவர் கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் புகார் அளித்திருக்கும் சில மாணவர்கள், "இது அவமானகரமானது" என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டம் (APPSC), "சுத்தம் என்று கூறி தனித்தனி உணவு இடங்களை வரையறுப்பதன் அவசியம், கல்லூரியில் உள்ள பிராமணர்களின் மேன்மையை வலுப்படுத்துவதற்காக மட்டுமே." என்று குற்றம்சாட்டியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டத்தின் ட்விட்டர் பதிவு