Page Loader
வரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது

வரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 27, 2024
10:17 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சற்று குறையத்தொடங்கியது. தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் பருவ மழை தொடங்கியதால், அதிகரித்து வரும் வரத்து காரணமாகவும், காய்கறிகளின் விலை சற்றே குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், இண்டைக்கு தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாயில் இருந்து 50 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இதே போல வெங்காயம், பீன்ஸ், அவரைக்காய் விலையும் சற்று குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

காய்கறிகளின் விலை குறைந்தது