பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்
செய்தி முன்னோட்டம்
பிலிபித் தொகுதியில் இருந்து சீட் மறுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த தொகுதியின் பாஜக எம்பி வருண் காந்தி, பிலிபிட் மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில், வருண் காந்தி 1983ஆம் ஆண்டு சிறுவயதில் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபிட் நகருக்கு தனது முதல் வருகையை நினைவு கூர்ந்தார்.
மேலும் தனது அரசியல் பயணம் முழுவதும் மக்களிடமிருந்து தனக்கு கிடைத்த நிலையான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
பிலிபிட் உடனான தனது உறவு, தனது கடைசி மூச்சு வரை தொடரும் என்று கூறிய அவர், சாமானியர்களுக்காக தொடர்ந்து வாதிட போவதாக உறுதியளித்தார்.
ஏமாற்றம்
தான் ஏமாற்றப்பட்டதை போல உணர்ந்ததாக வருண் காந்தி வருத்தம்
முன்னதாக மார்ச் 22 அன்று, BJPயின் ஐந்தாவது சுற்று வேட்பாளர் அறிவிப்புகளில், வருண் காந்திக்கு பதிலாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாத் அந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பிறகு, வருண் காந்தி "ஏமாற்றப்பட்டதாக" உணர்ந்ததை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அவரது தாயாரும், சுல்தான்பூர் எம்பியான மேனகா காந்திக்கு, மீண்டும் சுல்தான்பூர் தொகுதியில் நிற்க பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில், பிலிபித் தொகுதியில் தாய்-மகன் இருவரும் போட்டியிடாதது இதுவே முதல் முறை.
"எம்.பி.யாக எனது பதவிக்காலம் முடிவடைந்தாலும், பிலிபித்துடனான எனது உறவை, எனது இறுதி மூச்சு வரை நிறுத்தமுடியாது. எம்.பி.யாக இல்லாவிட்டாலும், ஒரு மகனாக, என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்" எனக்கூறியுள்ளார்.
embed
வருண் காந்தி எழுதிய கடிதம்
प्रणाम पीलीभीत 🙏 pic.twitter.com/D6T3uDUU6o— Varun Gandhi (@varungandhi80) March 28, 2024