
தமிழகத்தில் 2வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 'வந்தே பாரத்' ரயில் சேவையானது சென்னை-கோவை இடையே செயல்பட்டு வருகிறது.
இதனையடுத்து, சென்னையில் இருந்து மதுரைக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவையினை துவங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால் இதனிடையே, பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், ரயில்வே துறையின் பயணிகள் நல வாரிய உறுப்பினர் எம்.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தின் தென் மாவட்ட பயணிகளின் நலனை கருதி 'வந்தே பாரத்' ரயில் சேவையினை சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்ததாக செய்திகள் தெரிவிக்கிறது.
வந்தே பாரத்
புதிய வந்தே பாரத் ரயில் சேவை குறித்து அதிகாரிகள் தகவல்
இதனையடுத்து, மேற்கூறியவாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டதன் அடிப்படையில் 'வந்தே பாரத்' ரயில் சேவையினை சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "அதிவிரைவு ரயில்கள் வேகமானது வந்தே பாரத் ரயிலின் வேகம் ஒத்துப்போவதால் ரயில் பாதைகளில் பிரச்சனை எதுவும் இல்லை.
பெட்டிகள் தயாரானவுடன் விரைவில் திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் சேவையினை துவங்கிவிடலாம்" என்று கூறியுள்ளனர்.
இதனிடையே, தென் மாவட்டங்களில் இயங்கும் ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பெட்டிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க போவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.