
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வானதி சீனிவாசன்
செய்தி முன்னோட்டம்
கோவை மாவட்ட தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியுமானவர் வானதி சீனிவாசன்.
இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனை தொடர்ந்து அவர் தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தனது உடல்நலம் குறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், "கோவையிலுள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளேன். காய்ச்சல் குறைந்துள்ளது. நலமாக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "மற்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று! pic.twitter.com/wYEHZLlgRD
— @JuniorVikatan (@JuniorVikatan) November 1, 2023