பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து
செய்தி முன்னோட்டம்
திருச்சி ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்லவன், வைகை உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதோடு, சில ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, திருச்சியிலிருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில் சேவைகள் இன்று(ஆகஸ்ட்.,26) முதல் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
மதுரை-சென்னை காலை.7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயிலானது(வண்டி.எண்.,12636) ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, கோவை-மயிலாடுதுறை செல்லும் ஜன்-சதாப்தி ஜூலை 30,31 தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நாகர்கோயில்-மும்பை இயங்கும் விரைவு ரயில், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியே இயக்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ரயில் சேவை
தேஜஸ் விரைவு ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி பொன்மலையில் இருந்து புறப்படும்
சென்னை-எழும்பூர் இடையே இயங்கும் பல்லவன் விரைவு ரயில்(வண்டி.எண்.,12605) முழுவதுமாக ஆகஸ்ட்.,1 ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-சென்னை எழும்பூர் இடையே இயங்கும் தேஜஸ் விரைவு ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி பொன்மலையில் இருந்து புறப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கச்சிகுடா-மதுரை இடையே இயங்கும் விரைவு ரயில் ஜூலை 31ம் தேதி விழுப்புரத்திலேயே நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நாளில் இந்த ரயில் மதுரையிலிருந்து கிளம்புவதற்கு பதில் விழுப்புரத்திலிருந்து காலை 10.40மணிக்கு புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை-திருச்சி இடையே இயங்கும் ராக்போர்ட் விரைவு ரயில் ஜூலை 30, 31ம் தேதிகளிளும், சோழன் விரைவு ரயில் ஜூலை.,30,31 மற்றும் ஆகஸ்ட்.,1ம் தேதி பொன்மலையோடு நிறுத்தப்படுவதோடு, இத்தேதிகளில் பொன்மலையில் இருந்தபடி 10.25க்கு கிளம்பி சென்னை சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.