Page Loader
இனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு
இனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு

இனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு

எழுதியவர் Nivetha P
Oct 13, 2023
02:03 pm

செய்தி முன்னோட்டம்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாறிவரும் நிலையில், அதன் ஓர் பகுதியாக இந்தியா முழுவதும் பணமில்லா பணப்பரிவர்த்தனை முறையும் வளர்ந்து வருகிறது. மக்கள் ஜி-பே, பே.டி.எம்., போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகிறார்கள். இதனிடையே அத்தகைய வசதி தனியார் நிறுவனங்களில் மட்டும் இருக்கும் பட்சத்தில், தற்போது இந்த வசதிகள் தமிழக அரசு சேவைகளிலும் செயல்பட துவங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் நியாயவிலை கடைகளில் பே.டி.எம். மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலுள்ள 588 கடைகளில் 562 கடைகளிலும், சென்னை மாநகரில் மொத்தமுள்ள 1700 கடைகளில் 1500 கடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ரேஷன் கடைகள்