Page Loader
கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

எழுதியவர் Sindhuja SM
Jul 22, 2024
02:41 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் பெயர்களை எழுத அனுமதி தந்த மாநில அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிமையாளர்கள் தங்கள் உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, 'பெயர் பலகை உத்தரவை' பிறப்பித்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச அரசின் உத்தரவை எதிர்த்து சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 

இஸ்லாமியர்கள்,ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை 

விசாரணையின் போது, ​​மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எந்த சட்ட அதிகாரமும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இது "உருமறைப்பு" உத்தரவு என்றும் கூறினார். "இது ஒரு உருமறைப்பு உத்தரவு. இதை மீறுபவர்கள் தங்கள் பெயரைக் காட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நாங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைப் பற்றி பேசுகிறோம். இந்த கடைகளில் பெரும்பாலானவை டீக்கடை மற்றும் பழக்கடை உரிமையாளர்களுக்கு சொந்தமானதாகும். இது பொருளாதார மரணம்" என்றும் அவர் கூறியுள்ளார். கன்வார் யாத்திரையில் வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கல் பெயர்களை வெளியே எழுதி போடா வேண்டும் என்று மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இப்படி செய்தால், இஸ்லாமியர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை நடக்கும் என்பதால் இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது,