Page Loader
வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி 
பலியானவரின் சடலம் அரசு மருத்துவமனைக்கு வெளியே கிடந்தது

வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி 

எழுதியவர் Sindhuja SM
திருத்தியவர் Sayee Priyadarshini
Apr 13, 2023
04:07 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் ஷிவம் ஜோஹ்ரி (32)ஆகும். ஷிவம் போக்குவரத்து தொழிலதிபர் பாங்கிம் சூரியின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஷிவம் திருட்டு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய பாங்கிம் சூரி, அவரை அடிக்க உத்தரவிட்டிருக்கிறார். ஜோஹ்ரியின் உடல் செவ்வாய்க்கிழமை அன்று அரசு மருத்துவமனைக்கு வெளியே வீசப்பட்டதாக கூறப்படுகிறது. பிரபல தொழிலதிபரும் கன்ஹியா ஹோசியரி உரிமையாளருமான நீரஜ் குப்தா உட்பட 7 பேர் மீது இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குப்தாவின் பேக்கேஜ் ஒன்று காணாமல் போனதை அடுத்து, அதை "திருடியதற்காக" பல ஊழியர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Embed

Twitter Post

Warning: Disturbing video In a UP shocker, 4 workers including a manager at a transport company were allegedly held captive, flogged and brutally tortured on suspicion of theft in Shahjahanpur district. Manager Shivam Johri (in the video) succumbed to the brutal torture. pic.twitter.com/ThH9lv23Oq— Piyush Rai (@Benarasiyaa) April 13, 2023