
ஓடும் பைக்கில் காதல் செய்த ஜோடி: வீடியோ வைரலானதால் போலீஸில் சிக்கினர்
செய்தி முன்னோட்டம்
ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் இருக்கும் நபரை லக்னோ போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓடும் பைக்கில் ஒரு ஜோடி அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற ஒரு வீடியோ நேற்று(ஜன: 17) சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்த லக்னோ போலீசார் பைக் ஓட்டிய நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவருடன் பைக்கில் சென்றது ஒரு 'மைனர்' பெண் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
கூடுதல் துணை போலீஸ் கமிஷனர்(ஏடிசிபி) ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, "ஸ்கூட்டரை ஓட்டி வந்த 23 வயதான விக்கி ஷர்மாவின் மீது ஐபிசி பிரிவு 294, 279-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்." என்று தெரிவித்திருக்கிறார்.
பொது இடத்தில் ஆபாசமான முறையில் நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாக பேசப்பட்ட பைக் ஜோடியின் வீடியோ
चलती स्कूटी में बीच सड़क इश्क़ का खुल्लम खु्ल्ला इज़हार।
— Shubhankar Mishra (@shubhankrmishra) January 17, 2023
- वीडियो लखनऊ हज़रतगंज का बताया जा रहा है। pic.twitter.com/65aLWkMPdd