Page Loader
வைரலாகும் வீடியோ: 71 வயது முதியவரை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற பைக் ஆசாமி
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது.

வைரலாகும் வீடியோ: 71 வயது முதியவரை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற பைக் ஆசாமி

எழுதியவர் Sindhuja SM
Jan 18, 2023
12:13 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரில் பரபரப்பான சாலை ஒன்றில் 71 வயது முதியவர் ஸ்கூட்டரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று(ஜன:17) முத்தப்பா என்ற 71 வயது முதியவரின் கார் மீது ஸ்கூட்டர் ஓட்டுநர் சாஹில் மோதியுள்ளார். சாஹிலை எதிர்கொள்ள காரில் இருந்து முத்தப்பா இறங்கியபோது, ​​சாஹில் தனது ஸ்கூட்டரில் தப்பிச் செல்ல முயன்றார். அவரை தப்பி செல்லவிடாமல் பிடிக்க முதியவர் முத்தப்பா சாஹிலின் ஸ்கூட்டர் கம்பியைப் பிடித்து கொண்டார். அப்போதும் அசராத சாஹில் முதியவரை சுமார் 800 மீட்டர் தூரம் வரை ஸ்கூட்டரில் தரதரவென இழுத்து சென்றார். இதை கண்ட அப்பகுதி மக்கள் சாஹிலின் ஸ்கூட்டரை வழைத்து பிடித்து அவரை போலீஸில் ஒப்படைத்தனர். அதனால், முதியவர் சிறு கீறல்களோடு தப்பினார்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகி கொண்டிருக்கும் முதியவரின் வீடியோ: