
காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி
செய்தி முன்னோட்டம்
டெல்லி கஞ்சவாலா பகுதியில், புத்தாண்டு கொண்டாடிவிட்டு நள்ளிரவில் குடிபோதையில் 5 பேர் காரில் வந்துள்ளனர்.
இவர்கள் கட்டுப்பாடு இழந்த நிலையில், எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதினர்.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண்ணின் கால் காரில் சிக்கியது.
இதனை கண்டுக்காமல் காரை இயக்கியதால், கிட்டத்தப்பட்ட 12கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு அஞ்சலி பலியானார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.
இது குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விபத்தை ஏற்படுத்திய காரை கண்டறிந்த போலீசார், அதில் பயணம் செய்தோரை கைது செய்துள்ளார்கள்.
ஏழைகளுக்கு உதவும் ஷாருக்கான்
பலியான அஞ்சலி சிங் குடும்பத்திற்கு 'மீர்' பவுண்டேஷன் மூலம் உதவிய ஷாருக்கான்
இதனையடுத்து, மரணம் அடைந்த பெண்ணின் வருமானத்தை நம்பி தான் அந்த குடும்பம் வாழ்ந்து வந்தது என்பதை கேள்வியுற்ற நடிகர் ஷாருக்கான் அவர்கள்,
தற்போது அஞ்சலி சிங் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளார்.
அவர் அளித்த நிதியின் தொகை எவ்வளவு என வெளியிடப்படவில்லை.
எனினும் அவர் அளித்த தொகை அந்த குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஷாருக்கான் தனது மீர் பவுண்டேஷன் மூலம் இந்த நிதியுதவியை செய்துள்ளார். தனது அறைக்கட்டளை மூலம் ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஷாருக்கான் தொடர்ந்து உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.