பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி
செய்தி முன்னோட்டம்
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: உத்தரப்பிரதேசம் லக்னோவின் விஜயநகர் பகுதியில் வசிப்பவர் அரவிந்த் சர்மா(45), இவர் ஓர் வழக்கறிஞர் ஆவார்.
இவர் கடந்த திங்கட்கிழமையன்று தனது வீட்டில் மட்டன் கறி வாங்கி தானே அதனை மிகுந்த ஆசையோடு சமைத்து வைத்துள்ளார் என்று தெரிகிறது.
தான் ஆசையாய் சமைத்த மட்டன் கறியினை குளித்துவிட்டு வந்து சாப்பிடலாம் என்று அவர் குளிக்க சென்றுள்ளார்.
குளித்துவிட்டு வந்த அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
அவரது மட்டன் கறியினை பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் நாய் வந்து சாப்பிட்டுள்ளது.
இது அவரை மிகுந்த அதிர்ச்சி மற்றும் கோபமடைய செய்துள்ளது.
அதனால், அவர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியினை எடுத்து அந்த நாயினை சுட்டு கொன்றுள்ளார்.
நாய்
அரவிந்த் சர்மா மீது வழக்குப்பதிவு
இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட அந்நாயின் உரிமையாளரான கல்பனா சதுர்வேதி இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில் அவர், வெகு நாட்களாகவே அரவிந்த் சர்மா, தனது 7 வயது செல்லப்பிராணியான மேடி'யை(நாய்)கொன்றுவிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார் என்றும்,
சம்பவத்தன்று தானும் தனது செல்லப்பிராணியும் வெளியில் செல்கையில் அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சற்று தவறியிருந்தால் மேடி மீது பாய்ந்த குண்டு தன்மீது பாய்ந்து, தான் உயிரிழக்க நேர்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, காவல்துறை தற்போது அரவிந்த் சர்மா மீது, ஐபிசி 307(கொலை முயற்சி), 429(கால்நடைகளை கொலை செய்வது அல்லது ஊனப்படுத்துவது), 504(அவமதிப்பு செய்வது), 506(குற்றம்சார்ந்த மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.