உ.பி.யில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொலை
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தனர்.
பலியானவர்களில் ஒரு ஆண், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று மகள்கள், அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இறந்த தம்பதியினரின் உடல்கள் தரையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளின் உடல்கள் படுக்கைப் பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்டன.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அனைத்து உடல்களிலும் தலையில் காயங்கள் இருந்தன.
அதை பார்க்கும்போது அவர்கள் கனமான பொருளால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் முதல்கட்ட அவதானிப்புகளின் அடிப்படையில் இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என தெரிகிறது என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
விவரங்கள்
விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறை
புதன்கிழமை மாலை முதல் குடும்பத்தினர் வெளியே காணப்படவில்லை என சந்தேகித்த அக்கம்பக்கத்தினர், ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடும் என காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வீடு வெளியே பூட்டப்பட்டு கிடந்ததால், கூரை வழியாக காவல்துறையினர் உள்ளே இறங்கியுள்ளனர்.
உள்ளே வீடு முற்றிலும் சீர்குலைந்து கிடந்ததையும், இறந்தவர்களின் உடல்களும் தரையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
படுக்கைப் பெட்டிக்குள் சாக்கு மூட்டையில் இளைய குழந்தையின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது தடயவியல் குழுக்கள் வீட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த பயங்கரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளை வெளிக்கொணர போலீசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.