ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பான விரிவான மசோதாவை அரசு கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மத்திய அரசு, மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் கட்டம் கட்டமாக தேர்தல் நடத்துவதற்கான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக, அதற்கான மசோதாவிற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.