பட்ஜெட் 2024: ஆன்மீக சுற்றுலாவை வலியுறுத்தும் நிதியமைச்சரின் அறிவிப்புகள்
இன்றைய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சில திட்டங்களை அறிவித்தார். அதன்படி, காசி விஸ்வநாதர் கோயில் மாதிரியைப் பின்பற்றி, விஷ்ணுபாத் கோயில் மற்றும் மகாபோதி கோயிலில் நடைபாதைகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் நிதி அறிவித்தார். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணுபாத் கோயில், கயாவில் பால்கு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள மகாபோதி கோயில் போத்கயாவில் உள்ளது.
ஒடிஷா மாநிலத்திற்கு சுற்றுலா வளர்ச்சி ஆதரவு
நரேந்திர மோடி அரசாங்கம் ஒடிசாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஆதரவையும் வழங்கும் என்று நிதியமைச்சர் மக்களவையில் தனது உரையில் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை செயல்படுத்த பொருளாதார கொள்கை கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் சீதாராமன் கூறினார். பீகார் மாநிலம் நாலந்தாவை சுற்றுலா மையமாக மேம்படுத்த அரசு உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.