LOADING...
இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது?
ஆசிரியர் ஒருவரைப் பணிநீக்கம் செய்திருக்கும் அன்அகாடமி நிறுவனம்

இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது?

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 18, 2023
02:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் இணையம் மூலம் கல்வி கற்கும் வசதியை வழங்கி வரும் முன்னணி கல்வி நிறுவனமான அன்அகாடமி, தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, கரண் சங்வான் என்ற ஆசிரியரைப் பணிநீக்கம் செய்திருக்கிறது. அன்அகாடமியில் நீதித்துறை தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்தி வரும் கரண் சங்வான், சமீபத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலானது. அந்தக் காணொளியில், 'கல்வியறிவு பெற்ற வாக்காளர்களுக்கு' வாக்களிக்க வேண்டும் என ஆசிரியர் கரண் சங்வான் மாணவர்களிடம் கூறுவது போல அமைந்திருந்தது. இந்தக் காணொளி இணையத்தில் வைராலாகி பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது அவரைப் பணிநீக்கம் செய்திருக்கிறது அன்அகாடமி நிறுவனம்.

அன்அகாடமி

அன்அகாடமி மீது அதிருப்தியில் நெட்டிசன்கள்: 

மேற்கூறிய காணொளி இணையத்தில் வைரலான நிலையில், எக்ஸ் தளத்தில் #uninstallunacademy என்ற ஹேஷ்டேக் வைரலாகி, இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்தச் செயலியை தங்கள் சாதனங்களில் இருந்து அன்இன்ஸ்டால் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருபக்கம் அந்தக் காணொளிக்காக அன்அகாடமி நிறுவனத்தின் மீது நெட்டிசன்கள் ஆவேசமடைந்திருக்க, மறுபுறம் அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்தது மிகவும் கடுமையான நடவடிக்கை எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆசிரியரின் பணிநீக்கம் குறித்து அன்அகாடமியின் நிறுவனர்களுள் ஒருவரா, ரோமன் சைனி எக்ஸில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "தரமான கல்வியை வழங்குவதே எங்கள் நோக்கம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பகிர்வதற்கான இடம் வகுப்பறை அல்ல. இதனை எங்கள் நடத்தை நெறிமுறைகளில் ஒன்றாகவும் நாங்கள் வைத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

அன்அகாடமிக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிடும் நெட்டிசன்கள்:

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

தனது கருத்தைப் பகிர்ந்திருக்கும் அன்அகாடமி நிறுவனர்:

Advertisement