வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆன்லைனில் பட்டப் படிப்புகளை வழங்கும் எட்டெக் நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
யுஜிசி தன்னால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பட்டங்களை வழங்கும் எட்டெக்(EdTech) நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை எச்சரித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) இந்தப் பட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிவித்ததோடு, இதுபோன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து நிறுவனங்களும் யுஜிசி (இந்தியாவில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல்)விதிமுறைகள், 2023 மற்றும்,
யுஜிசி (இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கல்விக் கூட்டுறவை இணைந்து டுவின்னிங் ப்ரோகிராம், ஜாயிண்ட் டிகிரி, டூயல் டிகிரி ஒழுங்குமுறைகள், 2022,) ஆகியவற்றின் கீழ் ஒப்புதல் பெற்ற பிறகு தான் படிப்புகளை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
2nd card
பிரான்சைஸ் ஏற்பாட்டில் இந்தியாவில் படிப்புகளை தொடங்க அனுமதி இல்லை
மேற்குறிப்பிட்ட இரண்டு விதிகளின்படி, பிரான்சைஸ்(Franchise) ஏற்பாட்டில் எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் பட்டப்படிப்புகளை வழங்க முடியாது.
உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்லூரிகளுடன் இணைந்து, யுஜிசியால் அங்கீகரிக்கப்படாத படிப்புகள் வழங்குவது அதிகரித்துள்ளதை அந்த அமைப்பு கண்டறிந்ததால், இது குறித்து தெளிவுபடுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
சில எட்டெக் நிறுவனங்கள் செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில், சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆன்லைன் பட்டம் மற்றும் டிப்ளமோ திட்டங்களை வழங்குவதாக விளம்பரம் செய்வதாக சுட்டிக்காட்டிய யுஜிசி,
அந்த படிப்புகள் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட மாட்டாது என கூறியுள்ளது.
3rd card
டூயல் டிகிரி குறித்து யுஜிசி விதிகள் என்ன சொல்கிறது?
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்லூரிகள் தொடங்குவதற்கான யுஜிசி-இன் விதிகளின்படி, சர்வதேச அளவில் முதல் 500 இடங்களை பிடித்துள்ள கல்லூரிகள் மட்டுமே இந்தியாவில் வளாகங்களை நிறுவ முடியும்.
மறுபுறம், ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில், இரண்டு முழுநேர படிப்புகளை தொடர அனுமதிக்கப்படுவார் என்று டூயல் டிகிரி வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
மாணவர் படிப்பின் போது, தான் பயிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
யுஜிசி வெளியிட்டுள்ள விதிமுறைகள்
UGC Regulations mandate that No Foreign Higher Educational Institution shall offer any programme in India without the prior approval of UGC, HEls shall not offer programmes under any franchise arrangement and such programmes shall not be recognised by UGC. pic.twitter.com/Ke1njwcLuu
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) December 16, 2023