Page Loader
யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியானது
நெட் தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியானது

எழுதியவர் Srinath r
Nov 17, 2023
05:38 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கான யுஜிசி நெட் 2023 தகுதி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு மையம் குறித்த தகவல்கள் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னர் யுஜிசி நெட் மற்றும் தேசிய தேர்வு முகமையின் இணையதளங்களில் வெளியிடப்படும். தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களிலும், காலை, மாலை என இரு வேலைகளில் தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி காலையில் ஆங்கில தேர்வும், மாலை வரலாற்றுத் தேர்வு நடைபெறுகிறது.

2nd card

ஜனவரி 10ல் வெளியாகும் தேர்வு முடிவுகள்

காலை நடைபெறும் தேர்வுகள் 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் நடைபெறும் தேர்வுகள், 3 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது. யுஜிசி நெட் 2023 , தேர்வு முடிவுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு குறித்த முழு அட்டவணை மற்றும் பிற தகவல்களை தெரிந்து கொள்ள யுஜிசி அல்லது தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மூலம் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

ட்விட்டர் அஞ்சல்

யுஜிசி நெட் தேர்வு அட்டவணை வெளியானது