Page Loader
ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?
4 மணி நேரங்களுக்குள் இந்த இரண்டு தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.

ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?

எழுதியவர் Sindhuja SM
Aug 28, 2023
06:46 pm

செய்தி முன்னோட்டம்

பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் நிறுவனங்களுக்கு பெயர் போன நகரம் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவாகும். இந்த நகரத்தில் சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோட்டாவில் தங்கி படித்து வந்த அவிஷ்கர் சுபாங்கி மற்றும் ஆதர்ஷ் என்ற இரு மாணவர்கள் கடந்த 24 மணிநேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தகவ்ன்ல்

கோச்சிங் நிறுவனங்களில் அடுத்த ஒரு மாதத்திற்கு தேர்வு நடத்த தடை 

இந்த வருடத்தில் மட்டும், கோட்டாவில் தங்கி படித்து வந்த 23 மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்ததுள்ளனர். நேற்று உயிரிழந்த இரண்டு மாணவர்களுமே மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஆவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கோச்சிங் நிறுவனங்களில் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த ஒரு தேர்வும் நடத்தப்படக்கூடாது என்று கோட்டா ஆட்சியர் ஓ.பி.பங்கர் உத்தரவிட்டுள்ளார்.

ட்னவ்க்ஜ்

ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவிஷ்கர் சுபாங்கி கோட்டாவில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து கொண்டே நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அவர் திடீரென்று, ஒரு தேர்வை முடித்து விட்டு கோச்சிங் நிறுவனத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனேவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.

நக்க்க்ஜ்

கொரோனா பரவலுக்கு பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 

தற்கொலை செய்து கொண்ட இன்னொரு மாணவரான ஆதர்ஷ், நேற்று மாலை குனாட்டி என்ற பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 மணி நேரங்களுக்குள் இந்த இரண்டு தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. கொரோனா பரவலுக்கு பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா ஊரடங்கின் போது, மிகக் குறைவான மாணவர்களே கோட்டாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்கிறது தரவுகள். 2018ஆம் ஆண்டில், 12 தற்கொலைகள் கோட்டாவில் பதிவாகியுள்ளன. 2017ஆம் ஆண்டில், 10 மாணவர்கள் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு, 15 கோட்டா மாணவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.

டவ்க்ஜ்ன்

தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் கோட்டாவில் உள்ள விடுதிகள்

இந்நிலையில், இந்த ஆண்டு இன்னும் முடிவடையாத நிலையில், அதற்குள் 23 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பீதியை கிளப்பியுள்ளது. கடந்த வாரம், 15 காய்ச்சல் மாத்திரைகளை உட்கொண்ட ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர் தெரிவித்திருந்தார். மாணவர்கள் இது போன்ற செய்லகளை செய்யாமல் இருக்க, கோட்டாவில் உள்ள விடுதிகளில் ஸ்பிரிங்-லோடட் ஃபேன்கள் பொறுத்தப்படுவது தற்போது வழக்கமாகி இருக்கிறது. மேலும், பால்கனிகள் மற்றும் லாபிகளில் "தற்கொலை தடுப்பு வலைகளை" விடுதிகள் புதிதாக வாங்கி நிறுவி வருகின்றன. போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.