கொடி அறிமுகம் செய்த 24 மணிநேரத்திற்குள் TVK தலைவர் விஜய் மீது வழக்கா?
நடிகர் விஜய் நேற்று தனது கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும பாடல் அறிமுகம் செய்தார். கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை இடம்பெற்றிருந்தன. பலரும் எதிர்பார்த்திருந்த இந்த நிகழ்ச்சி நடந்து 24 மணிநேரம் முடிவதற்குள் இந்த கொடி மீதும், கொடியின் சின்னத்தின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் பின்னணி என்ன? மேலும் தேர்தல் ஆணைய விதிமுறையின்படி கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து எந்த ஒரு கொடியிலும் உயிருள்ள ஜீவன்களான மிருகம், பறவை, போன்ற பயன்படுத்தபடக்கூடாது என்பது விதி. ஆனால் தற்போது அதை விஜய் மீறி விட்டார் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டு கொடியை பயன்படுத்தியதால் புகார்
அடுத்ததாக, தமிழக வெற்றிக்கழக கொடி மீதான நிறம் தொடர்பாக இந்திய குடியரசு தூதரகம், ஸ்பெயின் தூதரகம் மற்றும் காவல்நிலையத்திற்கு மற்றுமொரு புகார் வந்துள்ளது. சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் அளித்துள்ள புகாரில், தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று, TVK கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஒன்றாக இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இது ஸ்பெயின் நாட்டை அவமானம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.