Loading...
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றி: தவெக அரசின் ரூ.1,439 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளின் மேம்பாட்டிற்கான சிறப்பு நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றி: தவெக அரசின் ரூ.1,439 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
02:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தமிழக வெற்றி கழகம் (தவெக) அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இவ்விரு தொகுதிகளின் மேம்பாட்டிற்கான சிறப்பு நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் மாபெரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்

ரூ.1,439 கோடியில் புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்

தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூர், பல்லடம் ஊராட்சிகளை சேர்ந்த மொத்தம் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்ட புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1,439 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

தாராபுரம், மூலனூர் மற்றும் குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு சுமார் 13,000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

தாராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களைத் தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாசன வாய்க்கால்களில் மண்திட்டுகள் மற்றும் புதர்களை அகற்றி 271 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ADVERTISEMENT

மதுராந்தகம்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி மாபெரும் திட்டங்கள்

அச்சரப்பாக்கத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்படும்.

விவசாயிகளின் நலனுக்காக ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு மற்றும் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மாநில விதைப் பண்ணை அமைக்கப்படும்.

புக்கத்துறை மடுவின் குறுக்கே ரூ. 5 கோடியில் தடுப்பணை, ஏரிகள் சீரமைப்பு, அறிவுசார் மையம் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கான புதிய தங்கும் விடுதி ஆகியவை அமைக்கப்படும்.

மேலும், புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT