
மதுரையில் தவெக-வின் 2வது மாநில மாநாடு: காவல்துறை விதித்துள்ள 27 முக்கிய நிபந்தனைகள்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்த உள்ள இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்ட காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் பாரப்பத்தியில் உள்ள சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர். பெரும் மக்கள் திரளும், முக்கிய தலைவர்கள் பங்கேற்பும் உள்ளதாக காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டை சீராகவும், பாதுகாப்பாகவும் நடத்த 30க்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்காக 5,000க்கும் மேற்பட்ட காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காவல்துறையின் அனுமதி கிடைத்த நிலையில் விஜய் மாநாட்டில் கலந்துக்கொள்ள கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || த.வெ.க. மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமத | #TVKMaduraiMaanadu | #TVK | #TVKVijay | #Madurai | #Police | #TVKMaanadu | #PolimerNews pic.twitter.com/ql9LGihwjZ
— Polimer News (@polimernews) August 12, 2025
நிபந்தனைகள்
மாநாட்டிற்கு முன் தமிழக காவல்துறை விதித்த முக்கிய நிபந்தனைகள்
1. மாநாட்டு திடலுக்கு 3 மணி நேரத்துக்குள் பங்கேற்பாளர்கள் வந்துவிட வேண்டும். 2. வெளியிலிருந்து வருபவர்கள் குறித்த விவரங்கள் காவல்துறைக்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும். 3. போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, சீரான சாலை அமைக்கும் நடவடிக்கைகள் அவசியம். 4. பார்க்கிங் மற்றும் மேடைக்கு இடையே தடுப்புகள் அமைக்க வேண்டும். 5. கர்ப்பிணிகள், முதியோர் ஆகியோருக்கு தனித்தனியான இட ஒதுக்கீடு. 6. விஜய்யின் வருகை வழியில் இருபுற தடுப்புச்சுவர் கட்டாயம். 7. பங்கேற்பாளர்களுக்கான அடிப்படை வசதிகள்(தண்ணீர், கழிப்பறை, முதலுதவி) வழங்கப்பட வேண்டும். 8. மக்கள் சாலையை கடக்க நேரிடும் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத ஏற்பாடுகள் 9. பாதுகாப்பு பணிக்குத் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும். 10. கொடி, பேனர், பட்டாசு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.