உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள்
செய்தி முன்னோட்டம்
17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களும் மீட்பு பணிகளில் அதிகம் உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பல நாட்களாக சரியான உணவு, காற்றோட்டம், சூரிய வெளிச்சம் ஆகியவை இல்லாமல் அந்த தொழிலாளர்களின் மன மற்றும் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த போதிலும், அவர்கள் மீட்பு பணியாளர்களுக்கு நன்றாக ஒத்துழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றோட்டம் இல்லாத இடத்தில் அவர்கள் சிக்கி இருந்ததால், மீட்பு பணி தொடங்கியதும் அவர்கள் இருந்த இடத்தில் ஆக்சிஜன் குழாய்களை பொறுத்த வேண்டி இருந்தது.
ஆனால், மீட்பு பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை.
தக்ஜகிவ்
ஒரு குழுவாக திறம்பட செயல்பட்ட 41 தொழிலாளர்கள்
அந்த சூழ்நிலையில், ஆக்சிஜன் குழாய்களை பொருந்தியது, 41 தொழிலாளர்களுக்கும் எதுவும் ஆகாமல் இருக்க பாதுகாப்பு புள்ளிகளை உருவாக்கியது ஆகிய வேலைகளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி சிக்கியிருந்த தொழிலாளர்களே மேற்கொண்டிருக்கின்றனர்.
மேலும், 41 தொழிலாளர்களும் தங்களுக்குள் சண்டையிடாமல், எந்த பிரச்சனையும் செய்யாமல், ஒரு குழுவாக திறம்பட செயல்பட்டதாகும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவையான கருவிகளை வைத்திருந்த அவர்கள் உறுதியையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி, மீட்புக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கிய அனைத்து பணிகளையும் திறம்பட செய்து காட்டியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அது போக, மருத்துவ பணியாளர்களின் அறிவுரைகளையும் மனநல ஆலோசனைகளையும் மறுக்காமல் கேட்டு கொண்ட அவர்கள் "உயர்ந்த ஒழுக்கத்தை வெளிப்படுத்தியதாக" அவர்களை கண்காணித்து வந்த டாக்டர் ரோஹித் கோண்ட்வால் பாராட்டியுள்ளார்.