Page Loader
ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை 
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - உயர்ந்த விலைவாசி

ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை 

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
04:47 pm

செய்தி முன்னோட்டம்

கோடை சீசன் காலம் தொடங்கியுள்ளதால் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே, நீலகிரிக்கு அன்றாட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது. இதனை தடுக்க நகருக்குள் நுழையும் வாகனங்களை நிறுத்தப்பட்டு, சுற்றுலா பேருந்துகள் மூலம் சுற்றுலா பயணிகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. மேலும், சுற்றுலா தளங்களை நன்றாக பராமரித்து வந்தாலும் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல், சாலை வசதி குறைவு, தங்கும் விடுதி கட்டணங்கள் உயர்வாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டி ஒரே நாளில் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

ஊட்டி கோவையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - தாறுமாறாக விலை உயர்வு

இதுமட்டுமின்றி குறிப்பாக பல பகுதிகளில் உணவகங்களில் உணவின் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு விற்கப்படுவதாகவும், நடுத்தர குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டி எழுந்து வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோடை சீசனில் அனைவரும் வந்து செல்ல பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடந்த 8 நாட்களில் மட்டுமே ஊட்டியில் 1 லட்சத்து 42 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதேபோன்று கோவையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அங்கு வால்பாறை மற்றும் டாப்சிலிப், ஆழியாறு உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.