உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை
கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது. கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ., ரூ.150ல் இருந்து ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனையறிந்த இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளார்கள். இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு தான் உள்ளது. அதன் ஒரு பகுதியாக தக்காளியினை ரேஷன் கடைகளில் சோதனை முயற்சியாக விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
100 கிராம், 150 கிராம் அளவில் தக்காளியினை வாங்கி செல்லும் மக்கள்
இதன் மூலம், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90க்கு விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் எதிர்பாரா அளவுக்கு தக்காளியின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி என்னும் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200ல் இருந்து ரூ.250 வரை விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தக்காளியினை கொள்முதல் செய்யவே யோசிக்கும் நிலையானது நிலவுகிறது. ஒரு கிலோ, இரண்டு கிலோ தக்காளி வாங்கி சென்றோர் தற்போது இந்த விலை உயர்வால் 100 கிராம், 150 கிராம் என்னும் அளவில் வாங்கி சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.