
தக்காளி விலை ரூ.20 குறைந்தது; பொதுமக்கள் மகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் உள்ள தக்காளியின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில், தக்காளியின் விலை, கிலோ ஒன்றிற்கு ரூ.20 குறைந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.
நேற்று, கிலோவிற்கு ரூ.130க்கு விற்ற நிலையில், இன்று ரூ.110க்கு விற்பனையாகிறது.
எனினும் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி, கிலோ ரூ.130க்கு தான் விற்கப்படுகிறது. தற்போது மொத்த சந்தையில் விலை குறைந்துள்ளதால், சில்லறை விற்பனையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில், தக்காளி, கொள்முதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது என்பது குபிடத்தக்கது. அதிகரித்த பருவமழையால், காய்கறிகளின் கொள்முதலும், வரத்தும் பாதிக்கப்பட்டதால் இந்த விலை உயர்வு என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
விலை குறைந்த தக்காளி
#JUSTIN || சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.20 குறைந்தது
— Thanthi TV (@ThanthiTV) July 14, 2023
நேற்று ரூ.130க்கு விற்ற நிலையில், இன்று ரூ.110க்கு விற்பனையாகிறது
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை
பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு… pic.twitter.com/kIjCdn9tP1