NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம்
    பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம்

    ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆன்லைன் முன்பதிவு திட்டம் குறித்த கருத்துக்கள் மற்றும் அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுள்ளது. இதுகுறித்தது

    அரசு போக்குவரத்துக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    "பயணிகளுக்கு அன்பான வேண்டுகோள்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நாள்தோறும் சராசரியாக 2,500 பேருந்துகளில் பயணிகள் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.

    பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக 150 படுக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசு பேருந்துகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    அறிக்கை

    அரசு போக்குவரத்துக் கழக அறிக்கையின் தொடர்ச்சி

    தொலைதூர மற்றும் புறநகர் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்தை www.tnstc.in என்ற இணையதளத்தையும் டிஎன்எஸ்டிசி அதிகாரப்பூர்வ மொபைல் செயலியையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை அதிக மக்கள் பயன்படுத்தி பயணம் செய்ய ஏதுவாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வரவேற்கப்படுகின்றன.

    பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ptcsoffice2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள்

    பயணிகளுக்கு அன்பான வேண்டுகோள்!

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை அதிக மக்கள் பயன்படுத்தி பயணம் செய்ய ஏதுவாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
    தங்களின் கருத்துக்களை ptcsoffice2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.… pic.twitter.com/aRPKCzTFuw

    — ArasuBus (@arasubus) September 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    போக்குவரத்து

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    தமிழ்நாடு

    ஸ்மார்ட் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அப்டேட் தமிழகம்
    விஜயராஜ் டு விஜயகாந்த்; கருப்பு எம்ஜிஆரின் 72வது பிறந்தநாள் விஜயகாந்த்
    சினிமாவின் கிங், அரசியலின் கிங் மேக்கர்; விஜயகாந்த் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் விஜயகாந்த்
    விநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு விநாயகர் சதுர்த்தி

    தமிழ்நாடு செய்தி

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா? கொலை
    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம் கமலா ஹாரிஸ்
    இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு ஹாக்கி போட்டி
    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினம்

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025