TNPSC குரூப் 4 தேர்வு 2026: சான்றிதழ் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ள குரூப் 4 தேர்வுக்கு மொத்தம் 14.89 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிவிக்கையின்படி, 46 வகையான பதவிகளில் மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இளநிலை உதவியாளர்: 3,762 பணியிடங்கள் தட்டச்சர்: 1,572 பணியிடங்கள் சுருக்கெழுத்து தட்டச்சர்: 404 பணியிடங்கள் VAO: 291 பணியிடங்கள் உள்ளிட்டவை நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பத் திருத்தம்
இன்று நள்ளிரவு 11.59 வரை விண்ணப்பத் திருத்தம் செய்யலாம்
கடந்த அக்டோபர் 6 அன்று தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நவம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தேர்வுக்கு மொத்தம் 14,89,025 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது பெயர்களிலோ அல்லது பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் மற்றும் விவரங்களிலோ ஏதேனும் தவறுகள் இருந்தால், அதனை இன்று நள்ளிரவு 11.59 மணி வரை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருத்திக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 2027 ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு 5,307 குரூப் 4 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது போட்டியாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதை காட்டுகிறது.