
டிஎன்பிஎஸ்சி 2025 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
2025-க்கான ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று (அக்டோபர் 10) வெளியிட்டுள்ளது.
இந்த தகவல்களை அதன் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் காணலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கான தேர்வுகள் எந்த தேதி நடக்கும் என்பதைக் குறிப்பிடும் ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது.
இந்த ஆண்டு, குருப்-1 தேர்வு, குருப்-4 தேர்வு, ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு என மொத்தம் 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு தேர்வுக்கும் அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், மற்றும் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்கிற விவரங்களை தேர்வர்கள் அறியலாம்.
காலியிடங்கள் தொடர்பான தகவல்கள் தேர்வுக்கான அறிவிப்பின் போது வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியானது! pic.twitter.com/Zt6WHSgStS
— Sun News (@sunnewstamil) October 10, 2024