மின் கட்டணத்தை பணமாக கட்டுபவர்களா நீங்கள்? இனி 5ஆயிரத்திற்கு மேல் கட்டமுடியாது!
தமிழக மின்வாரியம் மின்கட்டணங்கள் கட்டுவதற்கு புதிய விதிகளை விதித்துள்ளது. அதன்படி, மின் கட்டணம் ரூ.5,000/-க்கு மேல் செலுத்த வேண்டி இருந்தால் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. இன்று முதல் (ஆகஸ்ட் 21) அமலுக்கு வரும் இந்த விதியின் படி, ரூ.5,000/-க்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதே நேரத்தில் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. முன்னதாக மத்திய அரசின் உத்தரவுப்படி, ரூ.20 ஆயிரத்திற்கு மேலான மின் கட்டண தொகையை ரொக்கமாக பெற கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில மாதங்கள் கழித்து அது ரூ.10,000/- குறைக்கப்பட்டது. தற்போது அதனை 5ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.