Loading...
படிப்பில் முதலிடம், வேலையின்மையில் அதிர்ச்சி! தமிழக இளைஞர்களின் நிலை குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 52% இளைஞர்கள் பட்டதாரிகளாக உள்ளதாக புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

படிப்பில் முதலிடம், வேலையின்மையில் அதிர்ச்சி! தமிழக இளைஞர்களின் நிலை குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்

எழுதியவர் Vasuki
Oct 18, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் தான் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் முறையான மாத ஊதியம் பெறும் பணிகளில் உள்ளதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச மையம் (CIC) மற்றும் ஃபியூச்சர் ஆஃப் இந்தியா பவுண்டேஷன் (Future of India Foundation) இணைந்து வெளியிட்டுள்ள தமிழ்நாடு இளைஞர் வாய்ப்புக் கையேடு (Tamil Nadu Handbook of Youth Opportunity) என்ற ஆய்வறிக்கையில் இந்த முக்கியப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஊதியம்

பட்டதாரிகளில் முன்னிலை

இந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டில் 22 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 52 சதவீதம் பேர் பட்டதாரிகளாக உள்ளனர்.

வேலைக்குச் செல்லும் இளைஞர்களில் 56 சதவீதம் பேர் நிலையான மாத ஊதியம் பெறும் பணிகளில் பணியாற்றுகின்றனர்.

அதே நேரத்தில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட பணியாளர்களில் 71 சதவீதம் பேரின் மாத வருமானம் ரூ.20,000-க்கும் குறைவாகவே உள்ளது என்ற கசப்பான உண்மையும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த வயதுப் பிரிவினரின் சராசரி மாத ஊதியம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.17,100 ஆக அதிகரித்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

வேலையின்மை

பெண்களின் பங்களிப்பு

மாநிலத்தின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 66%) பட்டதாரிகளாகவே உள்ளனர் என்பது இக்கையேட்டின் மற்றொரு அதிர்ச்சித் தகவலாகும்.

மேலும், இளம் பெண்களில் 40 சதவீதம் பேரும், இளைஞர்களில் 10 சதவீதம் பேரும் வேலையிலோ, கல்வியிலோ அல்லது தொழிற்பயிற்சியிலோ ஈடுபடாமல் உள்ளனர்.

எனினும், கடந்த 2025 வரையிலான எட்டு ஆண்டுகளில், 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே வேலையின்மை விகிதம் 26 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேபோல், பணிபுரியும் இளம் பெண்களின் பங்களிப்பு 19 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT