Loading...
தமிழக வானிலை அப்டேட்: தேனி, மதுரை, தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை
தேனி, மதுரை, தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை அப்டேட்: தேனி, மதுரை, தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
08:33 am

செய்தி முன்னோட்டம்

தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை முன்னறிவிப்பு

இன்று மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் ஏனைய இடங்களில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT