NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்
    சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்

    சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 07, 2025
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.

    இந்த திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தரும் ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன.

    தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டமைப்பில் ஆண்டுதோறும் இந்த திருவிழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

    இதில், வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றில் பயணிக்கவும், அவற்றை காணவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டு, கூடுவது வழக்கம். அந்த வகையில் இது பத்தாவது ஆண்டாகும்.

    இந்த ஆண்டில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா, தமிழக அரசின் சுற்றுலா துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.

    திருவிழா

    சர்வதேச பலூன் திருவிழா மூன்று மாவட்டங்களில் ஏற்பாடு

    பொதுவாக பொள்ளாச்சியில் மட்டும் நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டு முதல் முறையாக சென்னை மற்றும் மதுரையிலும் நடைபெற உள்ளது.

    இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெப்ப காற்று பலூன்கள் மற்றும் சிறுத்தை, ஓநாய், யானை உருவப் பலூன்களும் பறக்கவிடப்படுகின்றன.

    இந்த விழா ஜனவரி 10 முதல் 12 வரை சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை கோவளத்தில், ஜனவரி 14 முதல் 16 வரை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ரைட் கொங்கு சிட்டியில், மற்றும் ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலாத்துறை
    சுற்றுலா
    தமிழக அரசு
    தமிழகம்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    சுற்றுலாத்துறை

    ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டி
    தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்  சுற்றுலா
    சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன? சுற்றுலா
    டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு  சென்னை

    சுற்றுலா

    வேற லெவல் விண்வெளி சுற்றுலா: அடுக்கு மண்டலத்தில் பலூன் சவாரிகளை நடத்தும் ஸ்டார்ட் அப்கள் விண்வெளி
    உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் சிங்கப்பூர்; அப்போ ஆபத்தான நகரம் எது?  சிங்கப்பூர்
    எகிப்தின் பண்டைய பிரமிடுகளுக்கு போலாமா ஒரு சுற்றுலா! எகிப்து
    மழைக்கால உல்லாசப் பயணங்களுக்கான டிப்ஸ் பயண குறிப்புகள்

    தமிழக அரசு

    வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு வெப்ப அலைகள்
    2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு தீபாவளி
    பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ் சிறப்பு பேருந்துகள்
    தமிழகத்தில் விரைவில் பைக் ஆம்புலஸ் சேவை அறிமுகம்; வெளியானது அரசு ஆணை தமிழகம்

    தமிழகம்

    தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம் சுற்றுலாத்துறை
    டிசம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்கள்; கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு
    ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025