Page Loader
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளை நீர் முழுமையாக வடியவில்லை.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

எழுதியவர் Srinath r
Dec 06, 2023
04:21 pm

செய்தி முன்னோட்டம்

வங்க கடலில் கடந்த வாரம் உருவான மிக்ஜாம் புயல், வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது. இதன் விளைவாக சென்னை கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரு மழையை எதிர்கொண்டது. மாநகரின் பெரும்பான்மையான பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியதால், கடந்த மூன்று நாட்களாக அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன. மிக்ஜாம் பாதிப்பிலிருந்து சென்னை மெல்ல மீண்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ளநீர் முழுமையாக வடியாத செங்கல்பட்டு மாவட்டத்தின், பல்லாவரம், வண்டலூர், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

3rd card

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவ முன் வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், அரசுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளக்காடான பகுதிகளிலிருந்து மக்களை மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மேலும், மீட்க முடியாத மக்களுக்கு விமான மூலம் உணவுப் பொட்டணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவ முன்வரும் நபர்கள் 9791149789, 9445461712, 9895440669, 7397766651 ஆகிய எண்கள் மூலம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.