Page Loader
தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80%
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார்

தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80%

எழுதியவர் Venkatalakshmi V
May 16, 2025
09:20 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட இந்த முடிவுகளின் படி, மொத்தம் 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. மொத்தமாக 9,13,036 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில், 4,46,411 மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வாளர்கள் மற்றும் 272 சிறைவாசிகள் அடங்குவர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 22 முதல் 30 வரை நடந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் பெறலாம்: https://www.digilocker.gov.in https://www.digilocker.gov.in https://tnresults.nic.in https://tnresults.nic.in

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post