LOADING...
தமிழகத்தில் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு 
6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2025
09:23 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை, ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2 மாத கோடை விடுமுறைக்கு பின்னர் புதிய கல்வியாண்டு ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று, ஏப்ரல் 24ம் தேதி முடிவடைகிறது. எனினும், பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 30 வரை பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் தேர்வு முடிவுகள் தொடர்பான வேலைகள் நடைபெறும். 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல் 17 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post